தொடர்ந்து பற்றி எரியும் குப்பை… மூச்சுவிட முடியாமல் திணறும் பொதுமக்கள்!

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே மலை போல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே…

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே மலை போல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு
எதிரே மலை போல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், பற்றி எரியும் தீயால் பொதுமக்கள்
கடும் அவதியடைந்து வருகின்றனர். செம்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
ஐ.பெரியசாமியின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே, டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள
குப்பையில் தீ வைக்கப் பட்டதால் , குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

மேலும், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு துர்நாற்றமும் வீசுவதால், நோய்
தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து
விசாரித்த போது, செம்பட்ட நகர் பகுதியில் பச்சமலையான்கோட்டை ஊராட்சி தூய்மை
பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ
மனைகள் மூலமாக வெளியேற்றப்படும் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும்
இறைச்சிக் கடைகள் மூலமாக கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது .

மேலும், ஊராட்சி நிர்வாகமே தீ வைப்பதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. ஆத்தூர்
ஊராட்சி ஒன்றிய அலுவகம் , நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் அரசு
இ-சேவை மையம் உள்ளிட்ட அரசுக்கு கட்டிடங்கள் குப்பை மேட்டை சுற்றியுள்ளது.
இந்நிலையில், நச்சு புகையால் கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.

இருந்த போதிலும், தமிழ்நாடு அரசின் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர்
ஐ.பெரியசாமியின் சட்டமன்ற அலுவலம் எதிரே, ஊராட்சி நிர்வாகம் குப்பை
கொட்டுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அமைச்சரும் , ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது .

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.