BTS வெளியிட்ட புதிய பாடல்: களைகட்டும் 10-ம் ஆண்டு கொண்டாட்டம்!

இசை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக பிடிஎஸ் இசைக்குழுவினர் ‘Take Two’ என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழு 2010ஆம் உருவாக்கப்பட்டு 2013BDS band celebrates…

இசை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக பிடிஎஸ் இசைக்குழுவினர் ‘Take Two’ என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.

தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழு 2010ஆம் உருவாக்கப்பட்டு 2013BDS band celebrates 10 years in the music worldஆம் ஆண்டில் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. அந்த ஆண்டில் ‘2 கூல் 4 ஸ்கூல்’ என்ற பாடல் முதன்முதலாக வெளியிடப்பட்டன. .சமூக கண்ணோட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட அவர்களின் பாடல் சமூக ஊடகங்களில் பிரபலமானது.

இவர்களின் இரண்டாவது கொரிய ஆல்பமான ‘விங்ஸ்’ (2016) என்ற ஆல்பம் தென் கொரியாவில் முதன்முதலில் 10 லட்சம் பிரதிகள் விற்று சாதனையை படைத்தது. 2017ஆம் ஆண்டில் உலகளாவிய இசைசந்தையில் நுழைந்து அமெரிக்காவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது பிடிஎஸ் இசைக்குழு.

6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள், கிராமி விருது உள்ளிட்ட விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது பிடிஎஸ். இந்நிலையில் பிடிஎஸ் தனது 10ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதனையொட்டி தென்கொரிய உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

தென்கொரியாவில் உள்ள ஹான் நதி purble நிறத்தில் ஜொலிக்கிறது. ‘Take Two’ என்ற புதிய பாடலை பிடிஎஸ் இசைக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்களை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.