“போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

போதைப் பொருட்களால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அப்போது ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில்குமார் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சிபிஐ விசாரணை என்பது மக்களுக்கு நீதி கிடைக்கும், தமிழ்நாடு காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு தலை பச்சமாக செயல்படும் என்பதால் சிபிஐ நேர்மையான விசாரணையானது.

அரசாங்கம் சிபிஐ விசாரணை உத்தரவிடும் அல்லது நீதிமன்றம் உத்தரவிடும், இதனால் மக்களுக்கு நியாயம் கிடைக்கப்படும். திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறையை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், லாக்கப்டெத், புகார் கொடுக்கும் நபர்கள் மீது தாக்குதல்
நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி இல்லை. சாரிமா ஆட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு மின்சார கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. போதை பொருட்களால் இளம் வயதினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இளம் பெண் விதவைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக” தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.