முக்கியச் செய்திகள் தமிழகம்

கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் இணைந்து நடத்தும் 52வது கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மாற்றங்களுக்கான பயிற்சி பட்டறை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்தியாவிலேயே அதிகளவில் தமிழகம்தான் வேளாண் உற்பத்தியில் ஈடுபட. வேண்டும் என இலக்கோடு தமிழக அரசு செயல்படுகிறது. 91,101 விவசாயிகளுக்கு 109.89 கோடி ரூபாயை பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 வழங்கப்படுகிறது. சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதுமாக வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கரும்பு விவசாயம் செய்பவர்கள் தண்டனைக் குரியவர்களாக பார்க்கப்படும் நிலை உள்ளது” என்று தெரிவித்தார்.

சர்க்கரை துறையின் உயர் அதிகாரிகள் நேரடியாக களத்தில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கரும்பு உற்பத்திக்கான செலவை குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஒரு தலை காதல் விவகாரம்; இளைஞர் மீது போக்சோ சட்டம்

Saravana Kumar

தாயிடம் இருந்து பிரிக்கும் நிகழ்ச்சி: குட்டி யானைக்கு புனித் ராஜ்குமார் பெயர்

Halley Karthik

சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

Vandhana