முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மாணவர்களுக்கு TC ஏதும் வழங்கப்படவில்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஏற்கனவே சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும் என்றும், நிலைமை கைமீறி சென்றால் மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான வளர்ந்து வரும் கல்வி குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டீன் ஏஜ் பருவத்துக்கு மாணவர்கள் வரும் போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், கற்றல் இடைவெளி, ஒழுக்கக்குறைபாடு ஆகியவற்றை எப்படி போக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், சமூக – பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தவறான தாக்கத்தைப் போக்க வேண்டும் என்றும், கொரோனாவுக்குப் பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள், உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் போது தான் TC தரப்படுவதாகவும், அப்படியான மாணவர்களுக்கு TC தரலாம் என்று அவர்களின் பெற்றோர்களே கூறுவதாகவும் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் TC ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கைமீறி செல்லும் போதுதான் TC வழங்கப்படும் என்றும் இனி மாணவர்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு’

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுப்பள்ளிகள், அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த அவர், தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிட இடைக்கால தடை!

Halley Karthik

தொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Ezhilarasan

நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு

Gayathri Venkatesan