டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
புதிய நடைமுறையில் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்த பரீசிலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான நியமனங்களில் 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியான உடன், அதை நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட அனைத்து பணியிடங் களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவற்றுக்கான அனுமதி கிடைத்தவுடன், அடுத்த மாதம் துறைவாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் பட்டியலுடன், தேர்வு குறித்த அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.







