முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

உலகத்தரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கும் CIPACA

ஊட்டியில் உள்ள பிஎஸ் மருத்துவமனை உலகம்தரம் வாய்ந்த CIPACA-வுடன் இணைந்து அவசர சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் உள்ள பிஸ் (BS Hospital) மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த CIPACA-வுடன் இணைந்து அவசர சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளது. இந்த அவசரச சிகிச்சை மையத்தால் உலகம் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க முடியும் என்றும் இதனால் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று பிஎஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ”நமது மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்தை தற்போது CIPACA பார்த்துக்கொள்கிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் மட்டுமே ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வந்தோம். மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, தற்கொலை செய்து கொண்டதால் உயிரிழக்கும் அபாயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருந்தோம். தற்போது CIPACA-வுடன் இணைந்ததால் பல்வேறு சிகிச்சைகளை வழங்க முடிகிறது. CIPACA குழுவினர் தெளிவான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். நோயாளிகளுக்கு தனிக் கவனம் வழங்கிறார்கள். அவர்களது குழுவில் இருக்கும் மருத்துவர்கள் அனுபவமிக்கவர்களாக இருக்கிறார்கள். நோயாளிகளுக்கு சர்வதேச தரம் வாய்ந்த சிகிச்சை அளிப்பது, வெளிநாடுகளில் இருக்கும் பல்துறை வல்லுநர்களின் அலோசனைகளை சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்குவது போன்ற விஷயங்களில் சிறந்து விளங்கிறார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!

Saravana

தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று

Ezhilarasan

தொகுப்பு வீடுகள் கட்டித் தருவேன்: பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வரதராஜன்

Halley Karthik