கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்வு!

கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளாவில் மாசு இல்லாத பசுமை எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அம்மாநில பல்வேறு நடவடிக்கைகளை…

கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.

கேரளாவில் மாசு இல்லாத பசுமை எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அம்மாநில பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மானியம், வங்கிகள் மூலம் எளிய கடன் வசதி உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு 27 ஆக இருந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 1,02,334 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் 1,00,000வது வாகனமாக பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாவியை, கொண்டோட்டியைச் சேர்ந்த கிரண் கே.பி.யிடம், போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு வழங்கினார்.
அப்போது, மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்ததாக மின்சார வாகனம் அதிகளவில் கேரளாவில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.