ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதியான ரவிச்சந்திரன் 1 மாதம் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு கண்களில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்கு உதவியாக இருக்க மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு 30நாட்கள் பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரவிச்சந்திரனை விடுப்பில் அனுப்பும் நடவடிக்கை தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று மதியம் 3.30மணிக்கு மேல் மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ரவிச்சந்திரனை 30நாட்கள் பரோலில் போலீசார் தூத்துக்குடியிலுள்ள சூரப்பன்நாயக்கன்பட்டிக்கு அழைத்து சென்றனர்.
30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் தினசரி அருகில் உள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.