புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், AIக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். AI மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மருத்துவ சுற்றுலா 5 இடங்களை மையாகக் கொண்டு அமைக்கப்படும்.

ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்.

3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்.

புதிய வடிமைப்பு துறைக்கான மையம் அமைக்கப்படும். இந்தியாவில் டிசைனர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் அதை சரி செய்வதற்காக இந்த மையம் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்கான கடலோரப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் அறிவிப்பு.

3 கோடி மக்கள் தேங்காய் உற்பத்தி சார்ந்து இருக்கிறார்கள். உலகத்திலேயே இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதன்மையான நாடாக உள்ளது. இவர்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு.

மும்பை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ABGC content creator lab 15,000 மேல்நிலை பள்ளிகளில், 500 கல்லூரிகளில் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் கவுரவமான வாழ்க்கைக்கு திட்டங்கள் அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளின் உதவிக்கான உபகரணங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு தொழில் தடம் அறிவிப்பு.

1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி குழு GRANT ஆக அறிவிப்பு. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய வருமான வரிசட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல்.

விபத்து கால காப்பீடுகள் என்பது வருமான வரி விலக்கை பெறுகிறது.

வருமானவரி தாக்கல் முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.