முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நாளை நீட் தேர்வு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் மையங்கள்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET – UG) தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் விண்ணப்பித்துள்ளனர். 19 ஆயிரத்து 867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடைபெறுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கூடுதல் நீட் மையங்கள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகிறாரா நவ்ஜோத் சிங் சித்து?

Gayathri Venkatesan

எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!

Jeba Arul Robinson

குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

Ezhilarasan