” எனக்கு இந்தியா என்கிற பெயரே போதும்.. அதுவே சரியானதாக இருக்கும்..” – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானது அதுவே சரியானதாக இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின்…

எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானது அதுவே சரியானதாக இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முதல் தற்சார்பு
திரைப்பட இயக்கத்தின் தலைவர் அருண்குமார் வெற்றி மாறனுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நம்மை
மேம்படுத்திக் கொள்ளவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு
நகர்த்திக் கொள்ளவும் வாசிப்பு மிக அவசியமானது. குறிப்பாக இந்த காலகட்டத்தில்
அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவில் இருப்பவர்களே படிக்க வேண்டும்.

இன்றைய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சமூகத்தை நோக்கி நகரும் சினிமாவாக
உள்ளது. கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும். வாசிப்பதன் மூலமாக நம்முடைய பழக்கங்களில் இருந்து அல்லது பழக்கி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.

பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில்
இருந்தாலும் அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர
மனிதர்களாகிய, விடுதலை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய அனைவரது கடமை.

அதைப் பற்றி பேசி இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருடன் நிற்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டுள்ள அனைத்திலிருந்தும் விடுதலை வாசிப்பின் மூலமே  கிடைக்கும் என நம்புகிறேன் என்றார். எனக்கு இந்தியா என்ற பெயரை போதும். அதுவே சரியானதாக இருக்கும்” என வெற்றிமாறன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.