வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!

கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் தோசை சுடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கல்லூரி காலம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையை…

கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் தோசை சுடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கல்லூரி காலம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கும் காலமாக அது இருக்கும். வகுப்பறையிலும், பேராசிரியர்களை கலாய்ப்பது, வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டு வேறு எதாவது செய்வது என்று அது ஒரு வேறுவிதமான வாழ்க்கையாக இருக்கும்.

இதையும் படிக்கவும்: ‘நாட்டு நாட்டுக்கு’ நடனமாடும் அமெரிக்க போலீஸ்… வைரல் வீடியோ!!

நாம் அனைவருமே கல்லூரி காலங்களில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது எதாவது உணவு பொருட்களை சாப்பிடுவது அல்லது மதிய உணவை நண்பனுக்கு தெரியாமல் வகுப்பில் வைத்து சாப்பிடுவது போன்ற பலவிதமான குறும்புகளை செய்திருப்போம்.ஆனால் அதையொல்லாம் மிஞ்சும் விதமாக மாணவர் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கு ஒரு மாணவர், ஆசிரியர் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே தோசை சுட்டு மற்ற மாணவர்களுக்கு வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.