மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்ததை அடுத்து, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையும் படிக்கவும்: வகுப்பறையில் தோசை சுட்ட மாவணர்; வைரலாகும் வீடியோ!
கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் சோபி டிவைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, எலிசி பெர்ரி நிதானமாக ஆடி 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அதே போல ஆல் ரவுண்டராக களமிறங்கிய ரிச்சா கோஸ், அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்கள் எடுத்தது.
151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, பவர்பிளே முன்னதாகவே முக்கிய
விக்கெட்டுகளை இழந்தாலும், அந்த அணி வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ரன்
குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதே போல இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட பெங்களூர் அணி வெற்றி பெறாமல் 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது







