வெச்ச குறி தப்பாது… துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்!

தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி ஆவாரங்குடிப்பட்டியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை ராயல் ஸ்பேர்ட்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.…

தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை, முன்னாள்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி ஆவாரங்குடிப்பட்டியில்,
20 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை ராயல் ஸ்பேர்ட்ஸ் கிளப் செயல்பட்டு
வருகிறது. ஸ்பேர்ட்ஸ் கிளப்பில் இயங்கும் மஹாராஜா துப்பாக்கி சுடும் மையத்தில்,
தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியானது 31-ம் தேதி துவங்கி
நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா , கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களில் இருந்து தேசிய, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள்
கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்த
உலக துப்பாக்கி சுடும் போட்டியில், ட்ராப் மேன் பிரிவில் உலக தரவரிசையில் 6ம்
இடத்திலுள்ள பிரித்திவிராஜ் தொண்டமான் பங்கேற்று, போட்டியில் கலந்து
கொண்டு விளையாடிய நிகழ்வு பார்வையாளரை மெய் சிலிர்க்க வைத்தது.

மேலும், இந்த போட்டியின் இன்றைய போட்டிகளை துவங்கி வைத்த முன்னாள்
அமைச்சரும் , விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர்
துப்பாக்கியை கையில் எடுத்து, குறி வைத்து இலக்கை நோக்கி செலுத்திஅனைவரையும்
வியப்பில் ஆழ்த்தினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப்
தலைவர், ராஜகோபால தொண்டமான், சாருபாலா தொண்டமான் ஆகியோர்
செய்திருந்தனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.