உத்திரமேரூர் அருகே, இஸ்லாமிய பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாலவாக்கம் ஏசியன் மழலையர்
மற்றும் துவக்கப்பள்ளியில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியர்கள் நடத்தும் அந்த பள்ளியில் அங்கு படிக்கும் இஸ்லாமிய குழந்தைகளுக்கு,
அவர்களின் பெற்றோர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பள்ளிக்கு அழைத்து
வந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்.
அதே போல மற்ற மதத்தினரும் தங்கள் பிள்ளைகளை, கிருஷ்ணர் மற்றும் ராதை
வேடமிட்டு பள்ளிக்கு அழைத்து வந்தனர். அந்த பள்ளியின் தாளாளர் மீர் என். தாஜுதீன்
அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், லயன்ஸ் சங்கத்தின் இரண்டாவது
இணை மாவட்ட ஆளுநர் பி.மணி சேகர் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு பரிசு
வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விழாவில், மெட்ரோ லயன்ஸ் தலைவர் பாக்கியநாதன் சாலவாக்கம் ஊராட்சி
மன்ற தலைவர் சத்தியா சக்திவேல், சாலவாக்கம் லயன்ஸ் தலைவர் அப்துல் உட்பட
ஏராளமான கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும், அந்தப் பள்ளியின்
தலைமை ஆசிரியை கவிதா வரவேற்று பேசினார். மேலும், துணைத் தலைமையாசிரியை
சசிகலா நன்றி கூறினார்.
கு. பாலமுருகன்








