45 நிமிடங்களிலேயே முடிவடைந்த சந்திப்பு… முடிவடையுமா தந்தை – மகன் அதிகார மோதல்?

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸிற்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ளது. கட்சியில் நிலவும் இந்த குழப்பங்களுக்கு தலைமை செயலாளர் அன்பழகன்தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அன்புமணியுடன் அவரது மகளும் சென்றிருந்தார். இந்நிலையில் 45 நிமிடங்களிலேயே இந்த சந்திப்பு நிறைவுப்பெற்று, அன்புமணி காரில் புறப்பட்டு சென்றார்.

என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அன்புமணி சென்றார் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.