இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய முயற்சியாக நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நிரப்பி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சாலைகள் வந்ததிலிருந்து, போக்குவரத்து உதவியுடன் நீண்ட தூர பயணங்கள் சுலபமானாலும், அவ்வப்போது அந்த சாலைகளில் ஏற்பாடு பள்ளங்கள் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது . அது நீங்கள் இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்தாலும் சரி, இங்கிலாந்தில் ஒரு ஆடம்பரமான நகரத்தில் தங்கியிருந்தாலும் சரி ,எல்லோருமே இந்த சிக்கலை சந்திக்கத்தான்
செய்வார்கள். அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் குழிகளால் மிகவும் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்திடம் அத்தகைய பள்ளங்களை நிரப்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அந்த குழிகளில் நூடுல்ஸை நிரப்பி வரும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் Mr Pothole என்று அழைக்கப்படும் மார்க் மோரல், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவர் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நல்ல பதிவுகளை தனது சமூகவலைத்தளபக்கங்களில் வெளியிட்டு பலரது
கவனத்தையும் பெற்றவர். அந்த வகையில், அவரது நகரத்தின் தெருக்கள் குழிகள் நிறைந்த சாலைகளாக இருப்பதை பார்த்த அவர், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதற்கு அரசாங்கத்தின் கவனத்தை இந்த விஷயத்தில் ஈர்க்க வேண்டும் என முடிவுசெய்து துவக்கத்தில், பள்ளங்களில் ரப்பர் வாத்துகளை வைத்து , ஓட்டைகளுக்கு பிறந்தநாள் கேக்குகளை வழங்குவது போல ஒரு விஷயத்தை செய்யலாம் என முடிவு செய்தார். ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடியவே, இந்த விஷயத்தை புதிய விதத்தில் கையாள முடிவு செய்து பயங்கரமான குழிகளை கொண்டு அந்த ஓட்டைகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதைக் காட்ட, சேதமடைந்த சாலைகளில் தனது மதிய உணவை சமைக்க முடிவு செய்தார்.
அதன்படி ஒரு நூடுல் பிராண்டுடன் இணைந்து பள்ள குழிகளில் சமைப்பது போன்ற விஷயத்தை தொடர்ந்து செய்து வரும் அவர், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் இவரது பதிவுகள் வைரலாகி வருவதனால் கூடிய விரைவில் நல்ல தீர்வு வரும் என இங்கிலாந்துவாசிகள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் UK அரசு சாலைகளை சரிசெய்ய £200 மில்லியன் மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில், முழுமையான தீர்வு பெற சுமார் £14 பில்லியன் செலவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/mrpotholeuk/status/1641340775844790272?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









