வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தை

திருப்பூர் மாவட்டம் பாப்பான் குளம் அருகே உள்ள சோளக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியது. திருப்பூர் மாவட்டம் பாப்பன் குளத்தில் சிறுத்தை தாக்கியதில் வன அலுவலர் ஒருவர் உட்பட 5…

திருப்பூர் மாவட்டம் பாப்பான் குளம் அருகே உள்ள சோளக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியது.

திருப்பூர் மாவட்டம் பாப்பன் குளத்தில் சிறுத்தை தாக்கியதில் வன அலுவலர் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 12 கேமிராக்கள் பொருதப்பட்டு சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

3 கூண்டுகள் வைத்து கூண்டுகளுக்குள் மாமிசங்கள் வைத்து சிறுத்தை மாமிசத்தை என்பதற்காக வருகிறதா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை க்கு பிறகு சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இரவு முழுவதும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என வனத்துறையினரும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அண்மைச் செய்தி: ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இந்நிலையில், நேற்று மாலை முதலே சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்தவித அறிகுறியும் தென்படாததால் வனத்துறை அதிகாரிகள் சோளக்காட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சோளக்காட்டில் சிறுத்தை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை வேறு பகுதிக்கு நகர்ந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.