‘தி லெஜன்ட்’ திரைப்படம் கன்னட திரையரங்குகளில் ஜூலை 28ல் ரிலீஸ்!

தி லெஜன்ட் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை தற்போது ஒப்பந்தமாகியுள்ளது. தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஃபேன் இந்தியா திரைப்படமாக வரும் ஜூலை…

தி லெஜன்ட் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை தற்போது ஒப்பந்தமாகியுள்ளது.

தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஃபேன் இந்தியா திரைப்படமாக வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியான இந்த படத்தின் டிரைலரும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

லெஜன்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 29 மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையைக் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 800 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம்’ – சிலை வடிவமைப்பாளர் சுனில் தியோர் விளக்கம்’

மேலும், தி லெஜன்ட் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை தற்போது ஒப்பந்தமாகியுள்ளது. இந்த தகவல் தி லெஜன்ட் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கே செந்திலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.