முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல’- முன்னாள் அமைச்சர்

அதிமுக தலைமை கழகத்தில் புகுந்து கோப்புகளை அள்ளி செல்வதற்குத் தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாகச் சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெற்றுத் தந்த இந்த இயக்கத்தை எம்ஜிஆர் 17.10.1972 ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், அதன் பின்னால், இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஜெயலலிதாவிற்குப் பின் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கழக ரீதியில் 70 மாவட்ட கழகச் செயலாளர்கள், 70க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், 2500 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் திமுகவை எதிர்க்கச் சிம்ம சொப்பனமாகவும், மீண்டும் அதிமுக மலர இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தொண்டர்கள் கோரிக்கை ஏற்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘தி லெஜன்ட்’ திரைப்படம் கன்னட திரையரங்குகளில் ஜூலை 28ல் வெளியீடு!’

ஓபிஎஸ் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி ஆற்றுப்பணிக்குக் கோயிலாக இடம் பெற்றிருக்கும் தலைமை கழகத்தை ரவுடிகளால், குண்டர்களால், காட்டுமிராண்டிகளால் காலால் எட்டி உதைக்கும் சம்பவம் நடந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஓபிஎஸ் செய்த செயலால் தான் தலைமை கழகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அங்கு உள்ள கோப்புகள் எல்லாம் ஓபிஎஸ் வந்த வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், அதிமுக தலைமை கழகம் என்ன உங்கள் தாத்தா?, இல்லை உங்கள் அப்பா சொத்தா?, இல்லை உங்கள் சொத்தா? எனக் கேள்வி எழுப்பியதோடு இது ஒன்னரைகோடி கழகத் தொண்டரின் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் விஜய் கார் வழக்கு-உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Web Editor

தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை: கெஜ்ரிவால்

Mohan Dass

உடைந்தது 2k கிட்ஸ்களின் உயிர்நாடி இசைக்குழு

Halley Karthik