‘தி லெஜண்ட்’: யுஎஸ்எ-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் இதுதான்!

‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை மிகப் பிரமாண்டமாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் யுஎஸ்எ (USA)-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட்…

‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை மிகப் பிரமாண்டமாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் யுஎஸ்எ (USA)-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான இவர் திரைத்துறையில் கால் பதித்துள்ள முதல் படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை ஜே.டி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மறைந்த விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். லெஜண்ட் சரவணாவே பிரமாண்டமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் மோசன் போஸ்டர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகச் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் சரவணன்.

அண்மைச் செய்தி: ‘நாளை தொடங்குகிறது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்’

இந்த படத்தில் விஞ்ஞானியாகச் சரவணன் நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்தைத் தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த நிலையில் எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உலக அளவில் தி லெஜண்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்நிலையில் யுஎஸ்எ (USA)-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு UA சான்று கிடைத்துள்ளது.

யுஎஸ்எ (USA)-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல்:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.