தங்கம் விலையில் 11 மாதங்களுக்கு பின் நிகழ்ந்த அதிரடி மாற்றம்: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.235 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.255-ம் சவரனுக்கு ரூ.2040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,215 க்கும், ஒரு சவரன் ரூ.97,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) ஆபரணத் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரனுக்கு ரூ.1880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840-க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.10,200 குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று வெள்ளி விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5000 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1.80 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முன் டிசம்பர் 2025 ல் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 96,000-ல் இருந்தது. அதற்கு பிறகு 11 மாதங்கள் கழித்து, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கு கீழ் வந்திருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.