முக்கியச் செய்திகள் தமிழகம்

காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது- ஆளுநர் ஆர்.என்.ரவி

காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது எனவும், பாரதம் தனது உண்மை தன்மையை உணர்ந்திட வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மத்திய கலாச்சார துறை சார்பாக, காஷ்மீரில் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு
உள்ள கலைகளின் பெருமைகளை சொல்லும் வகையில் விட்டாஸ்டா (VITASTA) என்ற தலைப்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷத்ராவில் மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று
தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டத்தின் ஒரு பகுதியாக
காஷ்மீரில் பாரம்பரிய உணவுகள், உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு கலைப்
பொருட்கள் ஆகியவை இங்கே அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்திருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று நடந்த காஷ்மீர் பற்றிய பரத நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் நடனம் மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு முன் நாம் காஷ்மீர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அது புத்த மதம் பற்றியது மட்டும் அல்ல அதையும் தாண்டி பல விஷயங்கள் இதில் உள்ளது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் அல்ல. அதில் நம்
வாழ்வியலும் அடங்கும் கஷ்மிற்கும் தமிழ்நாடுக்கு பல தொடர்பு இருக்கு. சிந்து நதி முதல் காவேரி நதி வரை இந்தியாவில் பல ஆறுகள் உள்ளது அவை நமது கலாச்சாரதத்தை கொண்டு இருக்கிறது.

காஷ்மீர் வரலாறு பற்றி பல ஆய்வுகள் தேவைப்படுகிறது. அவை பல முக்கிய விஷங்களை
வெளியே கொண்டு வரும். நாடு முழுவதும் வேறு வேறு நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் ஒன்றே.18 நூற்றாண்டு முன் வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடக இந்தியா இருந்துள்ளது. அது இல்லாமல் போனதற்கு காரணம் ஆகிலேயே ஆட்சி தான். அதனை நாம் மீட்டு எடுக்க வேண்டும். அதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும்.அரசர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடிவு செயத்து இனிமேல் பிரச்னை வர கூடாது என்பதற்காக தான். ஆனால் அதன் பின் கூட காஷ்மீர் விவராகரத்தில் பல பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை உள்நாட்டு, வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளால் ஏற்பட்டது.

அதேபோல இந்தியாவின் சொந்த மக்கள் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது artical 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்த காஷ்மீரில் பல நல்ல விஷயங்கள் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! 90.93% பேர் தேர்ச்சி!

Web Editor

‘நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைப்பேன்’: உதவி கேட்ட நடிகர் கொரோனாவுக்கு பலி!

Halley Karthik

1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்

EZHILARASAN D