புதிய போஸ்டர் வெளியிட்டு கருப்பு படக்குழு புத்தாண்டு வாழ்த்து….!

சூர்யா – ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் படக்குழு சார்பில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. ரெட்ரோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான கருப்பு படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பர்ப்பை அதிகரித்தது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘GOD MODE’  தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கருப்பு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.