நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!!

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஊழல் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர்…

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஊழல் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு. நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர்கள் சதீஷ் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தனர்.

ஆடியோவின் உண்மை தன்மையை தடயவியல் தணிக்கை செய்யக்கோரி அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், “30,000 கோடி ஒரே வருடத்தில் செலவழித்தது பற்றிய ஆடியோ தொடர்பாக, பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும் சுதந்திர தடயவியல் தணிக்கை வேண்டும் என கேட்டுள்ளோம்.

இதையும் படியுங்கள் : கானக் குரலால் மக்களைக் கவர்ந்த எவர்கிரீன் பாடகி எஸ்.ஜானகி!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டால், நான் பேசிய ஆடியோ இல்லை என கூறியுள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தோம். நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். அவர்கள் குற்றவாளி இல்லை என நிரூபிக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் மனு அளிப்போம்.

திமுக-வில் எல்லோரும் உறவினர்கள் தான். அமைச்சரின் உண்மையை கண்டறிய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுநரிடம் அதிகமாக மனு அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “எங்கள் கோரிக்கை இந்த ஆடியோ விவகாரத்தில், தனி ஆணையம் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும். தமிழ்நாட்டின் சிஇஓ ஆளுநர் தான்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.