கானக் குரலால் மக்களைக் கவர்ந்த எவர்கிரீன் பாடகி எஸ்.ஜானகி!

வெரைட்டி வாய்சுக்கு சொந்தக்காரர்…. 60 ஆண்டு காலம், 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிக் களித்தவர். கானக் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.ஜானகியை பற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்… கொஞ்சும் சலங்கை எனும் படத்தில்…

வெரைட்டி வாய்சுக்கு சொந்தக்காரர்…. 60 ஆண்டு காலம், 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிக் களித்தவர். கானக் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.ஜானகியை பற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

கொஞ்சும் சலங்கை எனும் படத்தில் ’சிங்கார வேலனே தேவா’ எனும் கடினமான பாடலை எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைப்பில் பாடி அசத்தியவர். ரீடேக் எடுப்பதற்கான சாதனங்களோ, குரலை மெருகேற்றும் கருவிகளோ இல்லாத சூழலில், தன்னம்பிக்கையோடு தாளம் போட வைத்தவர். ஒரே டேக்கில் அத்தனை கடினமான பாடலைப் பாடி, சுற்றி இருந்த கலைஞர்களை மிரள வைத்தவர். பின்னர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து 1970களில் ஜானகி, தன் ஏகாந்த குரலால் மக்களை ஈர்த்தார்.

1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற மச்சான பார்த்தீங்களா எனும் பாடல் அப்போது மக்களிடையே பெரும் ஈர்ப்பை உருவாக்கி, திரையரங்கில் மக்கள் கூட்டத்தை ஈர்த்தது. அதன்பின் 1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடல், இள நங்கைகள் முணுமுணுக்கும் பாடலாகிப்போனது.

இதையடுத்து 1980களில் ஜானகியும், இளையராஜாவும் இணைந்து திரையுலகையே தங்கள் பாடல்களால் கட்டிப்போட்டனர். ஜானகியின் பின்னணி குரலில் வெளியான ஆயிரம் தாமரை மொட்டுக்களே, காற்றில் எந்தன் கீதம், பொத்தி வச்ச மல்லிக மொட்டு என அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்.

ஜானகியின் தனித்துவமே அவரது வெரைட்டி வாய்ஸ்தான். கதாநாயகிகள் மட்டுமல்லாது, மூதாட்டி முதல் மழலை வரை, ஏன் ஆண்களுக்குக்கூட பொருந்தியது அந்த ஏகாந்த குரல். அத்தனை பாடல்களும் இன்றளவும் பட்டி தொட்டிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

குயிலாக பாடிக்கொண்டிருந்த ஜானகி, கடந்த 2013ம் ஆண்டு சிங்கமாக கர்ஜித்தார். மத்திய அரசின் விருதுகளுக்கு தென்னிந்திய கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை எனக்கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை தைரியமாக வாங்க மறுத்தார் ஜானகி.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014-ல் வேலையில்லா பட்டதாரி படத்தில், தனுஷின் இணைந்து அவர் பாடிய பாடல், இன்றைக்கும் பலரின் பேவரட் சாங்காக உள்ளது. இதைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு, வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக மட்டுமே பாடி புகழை சேர்ப்பதை விட வருங்கால தலைமுறையினருக்கு வழிவிடுவதே சரியானது என முடிவெடுத்து, தனது ஓய்வை அறிவித்தார் ஜானகி.

2016ம் ஆண்டு பத்து கல்பனாக்கள் எனும் மலையாளப்படத்தில் பாடிய அம்மா பூவினும் எனும் பாடலே ஜானகியின் இறுதிப்பாடல். ஜானகி பாடுவதை நிறுத்தினாலும், அவர் பின்னணி பாடி வெளியான 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களின் மூலம் மக்கள் மனதில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.