முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி

ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், தொற்றில் இருந்து மீண்டு விரைவில் அணியில் இடம்பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Gayathri Venkatesan

பிரபல நடிகை திடீர் திருமணம்: டிவி நடிகரை மணந்தார்

Halley karthi

100 கோடி தடுப்பூசி: பிரதமரை கெளரவித்த ஸ்பைஸ் ஜெட்

Halley karthi