தேனி அருகே சித்தப்பாவுடன் சேர்ந்து 16 வயது மகன், தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுன்டன்பட்டி பள்ளி ஓடை தெருவைச்
சேர்ந்தவர் ஆசையன்(43) விவசாயம் செய்து வரும் இவருக்கு செல்வி (35) என்ற
மனைவியும், அபினேஷ்(16) மற்றும் ஹரீஷ் (18) என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் அதிகாலை தோட்டத்திற்குச் சென்ற ஆசையன் அன்னஞ்சி என்ஜிஓகாலணி பகுதியில் செல்லும் புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருப்பதாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அல்லிநகரம்
காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆசையன் இறப்பில் சந்தேகம் இருந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பலஅதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்தது.
விசாரணையில் இறந்த ஆசையன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்துள்ளதாகவும் இதன்காரணமாக மனைவியுடன் அவ்வபோது சண்டை போட்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதன்காரணமாக ஆசையனின் இளைய மகன் அபினேஷ் மற்றும் அவரது சித்தப்பா உறவுமுறை உள்ளசிவனேஷ்வரன் ஆகிய இருவரும் ஆசையன் தனது இருசக்கர வாகனத்தில் அதிகாலைதோட்டத்திற்குச் செல்லும் போது புறவழிச்சாலையில் மற்றொரு வாகனத்தை வைத்து மோதி விபத்து நிகழ்ந்தது போல கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக விபத்து வழக்கைக் கொலைவழக்காக மாற்றி அபினேஷ் மற்றும் சிவனேசனை கைது செய்துள்ளனர்.







