டீசல் திருடிய கும்பல்; அதிகாரிகள் மீது தாக்குதல்

தர்மபுரி மாவட்டம் அருகே டீசல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டல் பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி,…

தர்மபுரி மாவட்டம் அருகே டீசல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டல் பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி, அகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்று செல்லும் கரைக வாகனங்களில் தொடர் டீசல் திருட்டு நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மற்றும் குடிமைப்பொருள் குற்றப் பிரிவு போலீசார் பொன்னேரி பகுதிக்குச் சென்று தீடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் கடப்பாரை, கொடுவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுற்றி வளைத்து 3 பேர் தாக்கினர்.

தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதும், போலீசாரைக் கண்ட 3 பேரைக் கொண்ட கும்பல் ஒட்டம் பிடித்தனர். பெரியசாமி என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 பேரல் டீசல் பின்பு மற்றொருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 பேரல் டீசலை போலீசார் கைப்பற்றினர். மேலும் அருகே பூட்டியிருந்த கடையை உடைத்து பார்த்தலில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கேன்களில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 1000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டீசல் திருட பயன்படுத்திய ஆலி, டியுப், பம்ப், உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த வி.ஏ.ஓ உதவியாளர் தங்கவேல் காரிமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு கைது செய்யப்பட்ட பெரியசாமி, அவரது மனைவி, மகள் மற்றும் மகனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.