ஆகஸ் 16, 1947 படத்தில் ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் நடித்துள்ளேன் என நகைச்சுவை நடிகர் புகழ் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது. கடந்த வாரம் டிரைலர் வெளியானது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்து போராடியர் வீரன் ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது இந்த டிரைலர் மூலமாக தெரிகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் கௌதம் கார்த்தி, புகழ், தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய புகழ் தெரிவித்ததாவது..
எனக்கு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் முருகதாஸ் மற்றும் இயக்குனர் பொன் குமார் அவர்களுக்கு நன்றி. புகழ் இப்படி தான் மைக் எடுத்த உடன் ஜாலியாக பேசுவேன் என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம். டப்பிங் பண்ணும் பார்த்தேன் சிறப்பாக இருந்தது.
சில படங்கள் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட சிரித்து விட கூடாது என பார்த்து பார்த்து நடித்துள்ளேன். ஒவ்வொருவரும் இந்த படத்தில் நிறைய உழைத்துள்ளனர்.
வெயில் மழை என்று பார்க்காமல் உதவி இயக்குனர்கள் உழைத்தனர். ஒரு நல்ல படத்தில் வேலை செய்துள்ளேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.” என தெரிவித்த புகழ் மேடையில் இயக்குனரை போல நடித்து காண்பித்தார்.







