ராஜ் பவனில் ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்!

ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக…

ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை,  தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என்று கூறினார்.

பொன்முடி விவகாரத்தில்,  மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதுடன்,  ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆளுநர் ரவி,  ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்  என்று குற்றம் சாட்டிய அமைச்சர்,  துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும்,  மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.