ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி

ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் என  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்…

ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் என  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை ஏற்றார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி , தமிழக முதலமைச்சர் உயர் கல்வித்துறையில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற அறிவுரை படி இன்று 5 ஆவதாக தொழில்நுட்ப கல்லூரி முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ள கூட்டம் நடந்தது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் வேலை வாய்ப்புகளுக்கு என்னென்ன புதிதாக செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பன குறித்தும், குறிப்பாக, மாணவர்கள் சேர்க்கை பற்றியும் பேசினோம் என்றார்.

மேலும், கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி சொன்னார்கள். அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தொழில்துறையையும், உயர் கல்வித்துறையையும் ஒருங்கிணைத்து நான் முதல்வன் திட்டம் செயல்பட்டு வருகிறது. 1 லட்சத்து 20 ஆயிரம் மேற்ப்பட்ட மாணவர்கள் நான் முதல்வன் திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர். பொறியியல் ,தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என கூறினார்.

இதுபோல் கலை அறிவியல் மாணவர்கள் பெற வேண்டும் என்று தான் பாடத்திட்டத்தில் தேவையானவற்றை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழில்நுட்ப கல்லூரியில் படித்த 17,352 இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன் படி இந்த ஆண்டு 800 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சேர்ந்துள்ளார்கள் என்றார்.

அத்துடன், தொழில்நுட்ப கல்லூரி 4 ஆம் பருவ விடுமுறை நாட்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடைமுறை 10 ஆயிரம் மாணவர்களுக்கு 16 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் அடிப்படை தேவைகள் எல்லாம் நிறைவேற்றி தரப்படும். காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு முதலமைச்சர் அறிவுரைப்படி நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

மேலும், தொழில்நுட்ப துறை மாணவர்களும், முதல்வர்கள் ஆசிரியர்களும் இந்த துறை முன்னேற்றத்திற்குப் பாடு பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 17.88 சதவீதம் அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு முடியவுள்ள நிலையில் காலி இடங்கள் சென்ற ஆண்டு 600 இருந்தது இந்த ஆண்டு 300 ஆக உள்ளது , வரும் ஆண்டுகளில் காலி இடங்கள் இன்றி முழுவதும் நிரப்பப்படும் என கூறினார்.

அத்துடன், ஏற்கனவே பொறியியல் கல்லூரியில் 2 ஆம் மற்றும் 4 ஆம் செமஸ்டர்களில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1 மற்றும் 3 ஆம் செமஸ்டர்களுக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த ஆண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும். கல்லூரி பேராசிரியர்கள் 4000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், 1890 பேர் தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்க பட உள்ளார்கள். ஆளுநர் அவர் வேலையை அவர் செய்கிறார் என்ன செய்கிறார் என்ன பிரச்சாரம் செய்கிறார் என்று தெரியும். கல்லூரிகளுக்கு சென்று என்ன பேசுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும் கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் அதை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் 3என்றார்.

அத்துடன், புதிய கல்வித் திட்டமாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்க என்று ஒரு குழுவை உருவாக்கி உள்ளார் அது செயல்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும். ஐ ஐ டி சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஐஐடி சேர்க்கை ஒன்றிய அரசின் அறிவுரைப்படி பின்பற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை தெரிவித்துள்ளார் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.