முக்கியச் செய்திகள் தமிழகம்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழை வெள்ளத்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் பாதிக்கபப்ட்டுள்ள நிலையில், பொட்டாஷ் உரத்தின் தேவை விவசாயிகளுக்கு அதிகரித்துள்ளதாகவும்,

உரத்தின் இருப்பை அரசு முன்கூட்டியே அரசு உறுதி செய்யவில்லை என குற்றம் சாட்டிய ஓ. பன்னீர்செல்வம், பொட்டாஷ் உரத்திற்கு கூடுதலாக 700 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்லதாக தெரிவித்துள்லார். எனவே, ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்தை, ஆயிரத்து 40 எனும் பழைய விலைக்கு, தொடக்க வேளான் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

தட்டுப்பாட்டை நீக்கி, பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க, அரசு ஆவன செய்ய வேண்டுமெனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நூற்றாண்டை தொடும் சபாநாயகர் இருக்கையின் வரலாறு…

Ezhilarasan

கொரோனா பரிசோதனை; திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Saravana Kumar

தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; எதிர்ப்புக்குழு அறிவிப்பு

Saravana Kumar