சென்னையில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.3 கோடி மதிப்பில், சென்னையில் 10 கடைகளும், திருப்பூரில் 3 கடைகளும், ஈரோட்டில் 3 கடைகளும், கோவையில் 4 கடைகளும் செயல்படவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கலப்படமற்ற தரமான தேநீரை குறைந்த விலையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், இந்த கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். pic.twitter.com/UO2PA1AohZ
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 15, 2021
இதன்படி, 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.