தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை…

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை
நிறைவேற்றவில்லை. இதனைக் கண்டித்துப் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோஷங்கள்
எழுப்பினர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.