தமிழகம் செய்திகள்

பிரதமர் முதல் ஜனாதிபதி வரை புகார் மனு அனுப்பியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்

ஜாதிப் பெயரை சொல்லி திட்டுவதாக , திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், திமுக நிர்வாகி மீது கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் மனு – காவல் துறையை விசாரணை நடத்த உத்தரவிட்ட ஆட்சியர்.

அணைக்கட்டு கெங்கநல்லூர் ஊராட்சியில் , ஓட்டேரி ஏரியில் திமுக மத்திய ஒன்றிய
செயலாளர்  மற்றும் ஒன்றிய கவுன்சிலர், அணைக்கட்டு திமுக ஒன்றிய துணைச் செயலாளர்  ஆகியோர், சட்டவிரோதமாக மண் அள்ளி விற்று வருகின்றனர்.

மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் , தனது குடும்பம் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த மனுவில், அணைக்கட்டு கெங்கநல்லூர் ஊராட்சியில் , ஓட்டேரி ஏரியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், அணைக்கட்டு திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர், சட்டவிரோதமாக மண் அள்ளி விற்று வருகின்றனர்.

இதனை, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்டபோது, என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ஜாதி பெயரை சொல்லி மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தகாத சொற்களால் திட்டினார்.

மேலும் , ஆளும் கட்சியாக இருப்பதால் , அதிகாரிகளையும் மிரட்டி அனைத்து காரியங்களையும் செய்து கொள்கிறார். இவர் மீது கல்குவாரி முறைகேடு காரணமாக ,அரசு ஏற்கனவே அபராதம் விதித்திருந்தது.

மேலும் , இவர் மீது அணைக்கட்டு மற்றும் பள்ளிகொண்டா உள்ளிட்ட காவல் நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் , காவல்துறைக்கு
நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழக முதலமைச்சர், வருமானவரித்துறை, கனிமவளத்துறை, எஸ்சி எஸ்டி பிரிவு, பிரதமர் மற்றும் ஜனாதிபதி வரை மனு அளித்துள்ளார்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

Halley Karthik

“சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம்”: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Halley Karthik

தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைது

G SaravanaKumar