தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் கருப்பு. இப்படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கருப்பு’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
அண்மையில் கருப்பு படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பர்ப்பை எகிற வைத்தது. இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுருந்தது.
அதன்படி தற்போது கருப்பு படத்தின் முதல் பாடலான ’GOD MODE’ வெளியானது. சாய் அபயங்கர் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சாய் மற்றும் கானா முத்து ஆகியோர் பாடியுள்ளார்.







