விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘The GOAT’ திரைப்படத்தின் படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது ‘The GOAT’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இதையும் படியுங்கள் : பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைதேர்வு எப்போது?
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்தியா, ரஷியாவில் கோட் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.








