50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற இலக்கு-அண்ணாமலை அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின் படி வருகின்ற 75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம்தோறும் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். சென்னை…

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின் படி வருகின்ற 75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம்தோறும் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் கே.அண்ணாமலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக மக்களை ஊக்கப்படுத்தி அனைவரது இல்லத்திலும் தேசிய கொடி ஏற்ற இன்று தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் குறைந்தபட்சம் 25
ரூபாய் முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரையிலும் தேசியக் கொடி விற்பனைக்கு கிடைக்கிறது.

50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிவைக்க வேண்டும் என்ற இலக்கில் தான்
அனைத்து இடங்களிலும் கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எங்கு பார்த்தாலும் கொடி செய்யும் இடங்களில் அதிக ஆர்டர் வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் போது பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பது
தெரியவருகிறது.

சமூகவலைகளைப் பக்கங்களில் ஆகஸ்ட் 15 வரை அவரவர் ப்ரோபைலை தேசியக் கொடியாக மாற்றி வைக்க வேண்டும். பாஜக கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் திமுக அதிமுக-திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

முதல் முன்னுரிமை கதர் கொடிக்கு தான். கதர்கொடி விலை உயர்ந்ததாக இருக்கும்
என்பதால் அனைவரும் கொடி வாங்க வேண்டும் என்பதற்காக பாலிஸ்டரும் விற்பனை செய்து வருகிறது.

75 ஆம் ஆண்டு சுதந்திரம் என்பது ஒரு சரித்திரம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் இதனை மையமாக வைத்து தான் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அமலாக்கத்துறை வேறு ஒரு விஷயத்தில் பிஸியாக உள்ளது. நிதி அமைச்சர் பேசும்போது தமிழக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதற்கு முதலில் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பந்தமாக பாஜக அடிப்படை விசாரணை செய்து
முடித்துள்ளது. அரசின் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன்
எங்கள் அறிக்கையை சமர்பிப்போம். திமுகவின் கொள்கை பிஜேபி கட்சியின் டிஎன்ஏவுக்கு எதிரானது. திமுக பிரிவினை பேசக்கூடிய சக்தி அப்படி இருக்கும் பொழுது ஒரு பொழுதும் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முடியாது.

யாரோடாவது கூட்டணி வைத்து நாங்கள் வெற்றி பெற வேண்டிய அவசியம் கிடையாது.
தன்னிச்சையாக நின்று கூட பாஜக வெற்றி பெறும். நடைபெறும் ஊழலுக்கு திமுக அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிரூபணம் செய்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இந்திய அரசியலமைப்புச்
சட்ட புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். அவர்கள் கட்சி தான் கல்வியை
பொதுப்பட்டியலில் கொண்டு வந்தார்கள். அதனால் அதைப் பற்றி பொதுவாக பேசுவதற்கு
உரிமை இருக்கிறது.

கே.எஸ்.அழகிரி ஏதோ ஒரு கட்சிக்கு கூஜா தூக்காமல் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக,
அண்ணா அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டார். மூளையையும் மனதையும் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும் என்றார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.