மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது ஏற்புடையது அல்ல என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கையடக்கக் கணினிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் – அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்த அதற்கு இத்தகைய கையடக்க கணினிகளும், மாதிரி வகுப்புகளும் நடத்த படுகிறது. மாணவர்கள் முழு கவனத்துடன் படித்து தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவை முதலமைச்சர் இறுதி செய்வார் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையில் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என சொல்லப்படுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.