உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மழை வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அதற்கு தீர்வுகளை காணும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளதாகக் கூறினார். அதேபோல்தான் நடந்து முடிந்த தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலினும் அயராது உழைத்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் , உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என்றும் தெரிவித்தார்.








