வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் நேற்று வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைத்துள்ளார்.
நேற்று வெளியான இந்த படத்தின் முதல் நாள், முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், குறிப்பாகக் காலை சிறப்பு காட்சிகள் மட்டும் 200 திரைகளிலும் வெளியானது. இதுவரை வெளியான சிம்பு படங்களில் இந்த படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல்களே கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் நேற்றுமட்டும் சுமார் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு சென்னையில் மட்டும் சுமார் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.







