முக்கியச் செய்திகள் சினிமா

எப்படி இருக்கிறது தனுஷின் ’நானே வருவேன்’ டீசர் ?

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இணைந்த புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இதைப்படத்திறக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் தனுஷ் தவிர, இந்துஜா, எல்லி அவ்ரம்பிரபு, யோகி பாபு, ஹியா டேவி, பிரணவ், பிரபவ், பிராங்கின்ஸ்டன், சில்வென்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘வீரா சூரா’ யுவனின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் நேற்று  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டீஸரில் இடம்பெற்றுள்ள  விஷுவல்கள் பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். முழுக்க முழுக்க நடிப்பை மையப்படுத்திய கதையாக இருக்குமென டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது. குறிப்பாக நீளமான முடி வைத்திருக்கும் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் எந்த உரையாடல் காட்சிகளும் வசனங்களும் இடம்பெறாத இந்த டீசரில் தனுஷின் ஆழமான குரலில் ‘ரன்’ என்ற வார்த்தை தவிர வேறு வார்த்தைகள் ஏதும் இடம் பெற வில்லை. மேலும் இப்படத்திலிருந்து முன்னதாக வெளியான வீரா சூரா பாடலே இந்த டீசரின் பின்னணியாக அமைந்ததோடு படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மிகவும் வித்தியாசமாக உள்ள இந்த டீசர், நானே வருவேன் திரைப்படத்தின் மீது ஒரு பெரிய அளவிலான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா பாணியில் பரப்புரை செய்த குஷ்பு!

EZHILARASAN D

குரூப் 2, 2ஏ தேர்வில் கவனம் ஈர்த்த 5 கேள்விகள்!

Halley Karthik

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

Web Editor