ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறை யினர் இரு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யானைக்…

ஓசூர் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறை யினர் இரு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யானைக் கூட்டம் தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் வனச்சரகப் பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.

இந்த ஆண்டும் கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த 70-க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி வனச்சரகத்தில் தஞ்சமடைந்துள்ளன. இடம்பெயரும் யானைகளை வனத் துறையினர் இரு குழுக்களாகக் கண்காணித்து வருகின்றனர்.

வனத்தையொட்டிய கிராமங்களில் ராகி பயிர் சாகுபடி செய்துள்ளதால் தேன்கனிக் கோட்டை வனச்சரக பகுதியில் யானைகளை இடம் பெயர விடாமல், மீண்டும் கர்நாடகாவுக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கால்நடை மேய்ச்சலுக்காக கிராம மக்கள் வனப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.