முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பணமோசடி வழக்கு: பிரபல நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்திருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை மீட்க டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

சுகேஷ், லீனா மரியா பால்

இதனால் அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அவர் காதலி லீனா மரியா பாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

Nora Fatehi

இந்நிலையில், விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி அவர் நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்கிறார்.

இதற்கிடையே மற்றொரு பாலிவுட் நடிகையான நோரா பதேஹி (Nora Fatehi)-க்கும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனால், அவர் இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

Advertisement:
SHARE

Related posts

கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி

Vandhana

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!

Gayathri Venkatesan

நடிகர் விஜய் குடும்பத்தையும் விட்டு வைக்காத மோசடிக் கும்பல்!!

Vandhana