கரகாட்டத்திற்கு தடையின்றி அனுமதி அளிக்கக் கோரி தலையில் கரகத்துடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற தடையால் கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. குறவன் குறத்தி ஆட்டம் இல்லாத கரகாட்டம் தேவையில்லை என நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய்து வருவதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
இதனைப் பாதுகாத்து இந்து சமய அறநிலையத்துறை கோயில் விழாக்களில் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு, மயில், காளி,
சிவன், சக்தி போன்ற நடன கலை வாழ்வாதாரங்களை தமிழக அரசுப் பாதுகாத்து உதவிட
வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரகாட்ட
மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தலையில் கரகத்துடன் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்
செய்ததோடு கோரிக்கை மனு அளித்தனர்.
—-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்