முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி ரத்து

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஒருநாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்தானது. இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால், பல விமர்சனங்களுக்கு உள்ளான இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற இருந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். ஆனால் மழையால் போட்டி ரத்தானதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போட்டி ரத்தானதைத் தொடர்ந்து, இந்திய மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடினர். பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘காதலுக்காக கடைசி வரை போராட வேண்டும்’ – நடிகை நஸ்ரியா

Arivazhagan Chinnasamy

சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் உறுதி

EZHILARASAN D

”தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Jayapriya