இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மோதல்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி…

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டியை எதிர்கொள்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஒருநாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்ய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது. இதனால், பல விமர்சனங்களுக்கு உள்ளான இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

அதேநேரத்தில், இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவதால் அவருடைய அனுபவமும் இந்த போட்டிகளின் மூலம் அதிகரிக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் இந்த போட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.