தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி உடன் கிரித்தி ஷெட்டி , சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘உயிர் பத்திக்காம’ லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வரும் மே மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







